சென்னையின் ட்ராபிக் பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள ‘சென்னையில் ஒரு நாள்’!

|

மலையாளத்தில் மாபெரும் வெற்றியடைந்து இந்தியாவையே ஒரு கலக்கு கலக்கிய ட்ராபிக் படம் தமிழில் சென்னையில் ஒரு நாள் எனும் தலைப்பில் ரீமேக் ஆகிறது.

இந்தப் படத்தைத் தயாரிப்பவர் ராதிகா. ஹீரோ அவர் கணவர் சரத்குமார்!

chennaiyil oru naal remake traffic
Close
 
வாழ்வின் வெவ்வேறு சூழல்களில்...வெவ்வெறு விதியின் பிடியில் சிக்கியிருக்கும் மனிதர்களை ஒரே நேர்க்கோட்டில் கொண்டு வந்து இணைப்பதுதான் சென்னையில் ஒரு நாளின் குறிக்கோள் !

'அன்போ,வெறுப்போ,ஆசையோ,கோபமோ,துரோகமோ, துயரமோ எந்த உணர்வாயினும் முக்கியமான தருணங்களில் வெளிப்படும் நுணுக்கமான மனித உணர்வுகள் வாழ்வில் பல அதிரடியான திருப்பங்களை ஏற்படுத்தி விடும். அது போல, துயரத்தின் விளிம்பில் இருக்கும் ஒருவர் எடுக்கும் முடிவு, இன்னொருவர்க்கு வரமான வாழ்க்கையாக மாறும் அதிசயத்தை இந்த படம் உரக்கப் பேசப் போகிறது. இந்த மூலம் உடல் உறுப்பு தானம் எனும் உயர்வான விஷயம் பற்றிய விழிப்புணர்வு நம் சமூகத்தில் பரவப் போவது ஒரு போனஸ் !' என்கிறார் படத்தை 'ஐ' பிக்சர்ஸ் சார்பாக தயாரிக்கும் ராதிகா.

இப்படத்தினை இணைந்து தயாரிப்பவர், மலையாள மூலப்படமான ட்ராபிக் படத்தை தயாரித்த லிஸ்டின்.

"விறுவிறுப்பாய் நகரும் திரைக்கதையில், சென்னை நகரின் பரபரப்பான டிராஃபிக்கும் ஒரு வித கதாபாத்திரமாகவே மாறிப் போகும். ஒரு உயிரைக் காப்பாற்றும் மனசு இந்த ஜன சந்தடியில் இருக்குமா... ரோட்டில் ஏற்படும் பல்வேறு தடைகளைத் கடந்து ஒரு உயிர் பிழைக்குமா... என கடைசி நொடி வரை படம் பார்ப்பவர்களின் நெஞ்சம் பதைபதைக்கும். இப்படியொரு உயிரோட்டமான கதையை தமிழர்கள் நிச்சயம் வரவேற்பார்கள். அந்த நம்பிக்கையோடுதான் களம் இறங்கியிருக்கிறோம்!" என்கிறார் லிஸ்டின்.

படத்தில் சரத்குமார், சேரன், பிரகாஷ் ராஜ், ராதிகா, பிரசன்னா, ஜெயப்பிரகாஷ், லட்சுமி ராமகிருஷ்ணா, 'பூ' பார்வதி என பெரிய நட்சத்திர பட்டாளமேயுண்டு. ஒவ்வோரு கேரக்டரும் மக்கள் மனதில் நின்று, தங்கி உறவாடி மகிழ்விக்கும். அந்த அளவிற்கு பெரியதொரு சந்தோஷத்தை இப்படம் தமிழ் ரசிகர்களுக்குத் தரும் என்கிறார் பட்த்தின் இயக்குனர் ஷகித் காதர்.

 

Post a Comment