டிச 5-ல் '6' பட இசை வெளியீடு... முதல் அழைப்பிதழை ரஜினிக்கு தந்த ஷாம்!

|

Shaam Dedicates His First Invitation To Superstar

ஷாம் நாயகனாக நடிக்கும் புதிய படம் ‘6' ன் இசைவெளியீடு வரும் டிசம்பர் 6-ம் தேதி வெளியாகிறது. இதற்கான முதல் அழைப்பிதழை சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வழங்கி மரியாதை செலுத்தினார் அவரது ரசிகரான ஷாம்.

ஷாம் தன் திரையுலக வாழ்க்கையின் திருப்புமுனையாக அமையும் என நம்பும் படம் இது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூனம் கவுர் நடிக்கிறார். வி.இசட்.துரை இயக்கியுள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.

இந்த படத்துக்காக ஷாம் ஏகத்துக்கும் மெனக்கெட்டுள்ளார். உடற்பயிற்சிகள் செய்து தனது தோற்றத்தை யாரும் அடையாளம் கண்டு கொள்ளமுடியாதபடி மெலிய வைத்துள்ளார்.

தாடி, மீசை, கண்களின் கீழ் இமைகள் வீக்கம் என மிகுந்த உடல் வலிக்குள்ளாகி அவர் நடித்துள்ள படம்.

இப்படம் சென்னையில் துவங்கி பல்வேறு மாநிலங்களில் பயணப்படுவது போல் திரைக்கதை அமைக்கப்பட்டு எடுக்கப்பட்டள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில், பாடல் வெளியீட்டை வரும் டிசம்பர் 5-ந் தேதி நடத்த முடிவு செய்துள்ளார்கள்.

அதன்படி, டிசம்பர் 5-ந் தேதி சென்னை சத்யம் திரையரங்கத்தில் இப்படத்தின் பாடல் வெளியீடு நடைபெறவிருக்கிறது. இதற்கான முதல் அழைப்பிதழை தனது மானசீக குரு ரஜினிக்கு தந்தார் ஷாம்.

'சுப காரியங்களுக்கான முதல் அழைப்பை எப்படி ஏழுமலையானுக்கு தருகிறார்களோ... அப்படி இந்தப் படத்துக்கான அழைப்பிதழை எங்கள் திரையுலகின் முதல்வரான ரஜினிக்குத் தருகிறோம்', என்று குறிப்பிட்டு அழைப்பிதழைத் தந்துள்ளார் ஷாம்.

 

+ comments + 1 comments

Anonymous
28 November 2012 at 21:57

I am having problems with the fonts

Post a Comment