தாத்தா வழியில் டைரக்ஷன்.... - எஸ்ஏசி பேத்தி சினேகா பிரிட்டோ!

|

Sac Introduces His Grand Daughter As Director Formally

சென்னை: தாத்தா எஸ்ஏசி வழியில் படங்களை தொடர்ந்து இயக்குவேன் என்று கூறியுள்ளார் சட்டம் à®'ரு இருட்டறை மூலம் இயக்குநராகும் சினேகா பிரிட்டோ.

எஸ்.ஏ.சந்திரசேகரன் டைரக்டு செய்து, விஜயகாந்த் நடித்து, 30 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த படம், சட்டம் à®'ரு இருட்டறை.' இந்த படம், அதே பெயரில் மீண்டும் தயாராகியிருக்கிறது.

ஆனால் இந்த முறை எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்காமல், தன் பேத்தி சினேகா பிரிட்டோவை இயக்குநராக அறிமுகப்படுத்துகிறார். சினேகாவின் தாயார் விமலாராணிதான் படத்தின் அதிகாரப்பூர்வ தயாரிப்பாளர்.

தமன், ரீமாசென், பிந்து மாதவி, பியா ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தின் அறிமுக நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில், டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கலந்துகொண்டு தனது பேத்தி சினேகா பிரிட்டோ, மற்றும் நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களை அறிமுகம் செய்தார்.

எஸ்ஏசி கூறுகையில், "சட்டம் à®'ரு இருட்டறை படம் தமிழில் வெற்றி பெற்றபின், தெலுங்கில் சிரஞ்சீவி நடித்து தயாரானது. கன்னடத்தில், சங்கர் நாக் நடித்தார். மலையாளத்தில், கமல்ஹாசன் நடித்தார். இந்தியில், அமிதாப்பச்சன், ரஜினிகாந்த் இருவரும் நடித்தார்கள்.

இந்த படத்தின் டைரக்டர் சினேகா பிரிட்டோ, என் அக்காள் மகளின் மகள். அவள் பிறந்து வளர்ந்தது, எங்கள் வீட்டில்தான். குழந்தையாக இருந்தபோது, என் மார்பில்தான் தூங்குவாள். கொஞ்சம் வளர்ந்த பிறகு, ''தாத்தா கதை சொன்னால்தான் தூங்குவேன்'' என்பாள்.

நானும் ஏதாவது கதை சொல்லி தூங்க வைப்பேன். சின்ன வயதில் இருந்தே கதை கேட்ட அனுபவம்தான் அவளை டைரக்டர் ஆக்கியிருக்கிறது என்று கருதுகிறேன்.
பழைய 'சட்டம் à®'ரு இருட்டறை' கருவை மட்டும் எடுத்துக் கொண்டு, காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து, இந்த படத்தை உருவாக்கியிருக்கிறோம்,'' என்றார்.

சினேகா பிரிட்டோ

சினேகா பிரிட்டோ பேசுகையில், ''படம் இயக்குவது அத்தனை சாதாரண சமாச்சாரமல்ல. இதில் ரீமாசென் சம்பந்தப்பட்ட 'சேசிங்' காட்சியை படமாக்க மிகவும் சிரமப்பட்டேன். எங்க தாத்தா (எஸ்.ஏ.சந்திரசேகரன்) உதவியுடன் படமாக்கி முடித்தேன். படத்தில் தாத்தா, போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். தாத்தாவைப் போலவே தொடர்ந்து படங்களை இயக்குவேன்," என்றார்.

 

Post a Comment