ரஜினி படத்துக்காக தமிழ் கற்கிறார் தீபிகா

|

Deepika is learning tamil for Rajini's movie சென்னை: ரஜினி படத்துக்காக தமிழ் கற்கிறார் தீபிகா படுகோன். மும்பை, கேரளா நடிகைகள் தமிழ் படங்களில் அதிகளவில் நடிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலும் நடிப்பதோடு சரி. டப்பிங் பேசுவதற்கு வேறு ஆளைத்தான் தேட வேண்டி இருக்கிறது. தமன்னா, காஜல் அகர்வால், அனுஷ்கா, ஹன்சிகா போன்ற முன்னணி நடிகைகளுக்கு பெரும்பாலும் வேறு நடிகைகள் அல்லது பாடகி, டப்பிங் பேசுபவர்கள் குரல் கொடுக்கின்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு தமன்னா தனது கதாபாத்திரங்களுக்கு டப்பிங் பேச முடிவு செய்துள்ளார். மும்பை இறக்குமதியாக ரஜினியின் 'கோச்சடையான் படத்தில் அறிமுகமாகிறார் தீபிகா படுகோன்.

பெங்களூரை சேர்ந்த இவர் தமிழில் முதல்படத்தில் நடித்தபோதும் தனது வேடத்துக்கு சொந்த குரலில் டப்பிங் பேச முடிவு செய்துள்ளார். 'கோச்சடையான்Õ பட இயக்குனர் சவுந்தர்யாவை சமீபத்தில் தொடர்பு கொண்ட தீபிகா தனது கதாபாத்திரத்துக்கு சொந்த குரலில் டப்பிங் பேச விரும்புவதாக தெரிவித்தார். அதை சவுந்தர்யா ஏற்றுக்கொண்டார். இதையடுத்து படத்தில் இடம்பெறும் வசனங்களை கேட்டு வாங்கி பயிற்சி எடுத்து வருகிறார். தீபிகா டப்பிங் பேச உள்ளதை பட குழுவில் உள்ளவர்கள் உறுதி செய்துள்ளனர். இதில் இடம்பெற்றுள்ள வசனங்கள் நடைமுறையில் வழக்கமாக பேசும் பாணியில் இல்லாமல் இலக்கிய நயத்துடன் அமைந்துள்ளது. ஆனாலும் அதை சவாலாக ஏற்று தீபிகா வசனம் பேச முடிவு செய்திருக்கிறாராம்.
 

Post a Comment