சென்னை: கவிஞர் வைரமுத்து ரொம்ப நாட்களாக உயரத்திலேயே உட்கார்ந்து கொண்டிருக்கிறார். தயவுசெய்து யாராவது அவரை கீழே இறக்குங்கள் என்றார் இயக்குநர் அமீர்.
ருத்ரன் இயக்கியுள்ள ‘வெற்றிச்செல்வன்' பட இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து மகன் மதன் கார்க்கி எழுதியுள்ளார்.
இப்ப மதன் கார்க்கியோட பாடல்களைக் கேட்டதும் வைரமுத்துவை இறக்கிவிட சரியான ஆள் இவர்தான்னு தோணுது. எனக்கு வைரமுத்துவோட சேர்ந்து வேலை பார்க்கணும்னு ஆசை. ஆனா திருத்தம் தேவைப்பட்டா அவர்கிட்ட எப்படி அதைக் கேட்டு வாங்கறது.. அவர்தான் அதை ஏத்துக்குவாரா?
அதனால அவர்கிட்ட நிறைவேறாத ஆசையை இப்ப கார்க்கியோட வேலை செய்து தீர்த்துக்கலாம்னு தோணுது," என்று பேசிக் கொண்டே போக, சிரிப்புடன் தலை கவிழ்ந்தார் மதன் கார்க்கி.
வைரமுத்துவை இறக்க மதன் கார்க்கி எதற்கு.. நா முத்துக்குமாரெல்லாம் தெரியலியா அமீர்? சொல்லப் போனால் இன்றைய தேதிக்கு வைரமுத்துவை ரொம்ப வேகமாக ஓவர் டேக் பண்ணிக் கொண்டிருப்பவர் முத்துக்குமார்தானே!