கிசு கிசு - அம்மா நடிகையின் வருத்தம்

|

Kodambakkam Kodangi நல்லகாலம் பொறக்குது... நல்லகாலம் பொறக்குது...

தாடிக்கார நடன இயக்கம் கோலிவுட், பாலிவுட் இண்டஸ்ட்ரில வேலை செய்றதுக்கு டபுள் டீம் வச்சிருக்காராம்... இருக்காராம்... கோலிவுட் டீம்ல ஒர்க் பண்றவங்க சவுத் மொழிகள்ல மட்டுமே கூட இருக்க முடியுமாம். பாலிவுட்டுன்னு புறப்பட்டுட்டா அங்க உள்ள இன்னொரு உதவியாளருங்க டீமோட ரெண்டற கலந்துடுவாராம் நடன இயக்கம். எங்களையும் பாலிவுட்டுக்கு கூட்டிட்டு போனா சம்பளமாவது கூட கிடைக்குமேன்னு உதவியாளருங்க ஏங்குறாங்களாம்... ஏங்குறாங்களாம்...

சுதாவான அம்மா நடிகைக்கு மல்லுவுட் மொழி நல்லா பேச வருமாம்... வருமாம்... ஆனா சமீபகாலமா வருத்தமா இருக்காராம். அதுக்கு காரணம் மல்லுவுட் படங்கள்ல யாரும் அவரை நடிக்க கூப்பிடுறதில்லையாம். சமீபத்துல கேரளாவுல நடந்த பங்ஷன்ல பரதநாட்டியம் ஆடினவர் தன்னோட ஆதங்கத்த வெளிப்படையா சொன்னாராம். மல்லுவுட்ல மொழி தெரியாதவங்க எல்லாம் நடிக்க¤றாங்க. ஆனா மொழி தெரிஞ்ச எனக்கு யாரும் சான்ஸ் தர்றதில்லன்னு சொல்றாராம்... சொல்றாராம்...

வேல்டு ஹீரோகிட்ட உதவி இயக்கமா இருந்தவருதான் கள்ள கன் படத்த தயாரிக்க¤றாராம்... தயாரிக்க¤றாராம்... 'இயக்கறத விட்டுட்டு ஏன் தயாரிப்பாளரா மாறீனிங்கன்னு கேட்டா கதை கதையா சொல்றாராம். 'ஸ்கிரிப்ட்டை எடுத்துட்டு ஹீரோங்ககிட்ட கதை சொல்லப்போனா, தயாரிப்ப பாருங்கன்னு அனுப்பறாங்க. தயாரிப்ப பாக்கப்போனா ஹீரோவ பாருங்கன்னு அனுப்பறாங்க. ரெண்டுபேருக்கும் இடைல உதவி இயக்குனருங்க பந்தாடப்படுறாங்க. அந்த அனுபவம்தான் என்ன தயாரிப்பாளராக்கிடுச்சின்னு புலம்புறாராம்... புலம்புறாராம்...
 

Post a Comment