விஜய் டிவியின் 'டி 20 சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சியில் பாட்டிகளின் நடனம் பார்வையாளர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.
நடனம் என்பது உற்சாகத்தை தரக்கூடிய விசயம். நடனத்தை முழுமையாக கற்றுக்கொண்டு முறைப்படி ஆடுவது ஒருவகை. இசையை கேட்டு தானாக தாளம் மாறாமல் ஆடுவது மற்றொருவகை. குழந்தைகள் எப்படி நடனமாடினாலும் அதை ரசிக்கலாம். அதேபோல் வயதான தாத்தாவோ, பாட்டியோ நடனமாடுவது கூட அபூர்வமானதுதான்.
விஜய் டிவியின் டி 20 சூப்பர் சிங்கர் நடனநிகழ்ச்சியில் நேற்று பச்சை அணியும், மஞ்சள் அணியும் மோதின. இதில் பச்சை அணியைச் சேர்ந்த இருவர் வல்லவன் படத்தில் வரும் "யம்மாடி ஆத்தாடி" என்ற பாடலை பாடினார்கள். இசையும், பாடலும் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தவே நிகழ்ச்சியை பார்க்க வந்திருந்த இரண்டு பாட்டிகள் நடனமாட ஆரம்பித்துவிட்டனர்.
வரிக்கு வரி அவர்கள் மாற்றிய ஸ்டெப் அனைவரையும் ரசிக்க வைத்தது. கடைசியில் பாடலுக்கு மதிப்பெண் போட்ட நடுவர் கிரிஷ் பாட்டியின் நடனத்திற்காக ஒருமதிப்பெண் அதிகம் கொடுத்தார். அது மட்டுமல்லாது பாட்டிகளை மேடைக்கு அழைத்து அவர்களுடன் ஒரு குத்தாட்டம் போட்டார். நேற்றைய ‘டி 20 சூப்பர் சிங்கர்' இசை நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக அமைந்தது
Post a Comment