வித்தியாசமான தோற்றத்தில் ஷாம் நடித்த 6 பட இசை - சுதீப் வெளியிட்டார்

|

Shaam S 6 Movie Audio Launched

சென்னை: நடிகர் ஷாம் மிக வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ள 6 என்ற படத்தின் இசையை கன்னட நடிகர் சுதீப் இன்று வெளியிட்டார்.

படத்தின் டிரைலரை இயக்குநர் அமீர் வெளியிட்டு வாழ்த்தினார்.

விஇஸட் துரை இயக்கியுள்ள இந்தப் படம் 6 ஆண்டுகள், 6 மாதங்கள், 6 பருவங்கள், 6 நாட்கள் என எல்லாமே 6 எண்ணி்க்கை வருவது போன்ற காலச் சூழலில் உருவாகியுள்ளது.

எழுத்தாளர் ஜெயமோகன் இந்தப் படத்துக்கு வசனம் எழுதியுள்ளார். ஷாமின் அண்ணன் தயாரித்துள்ளார்.

இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சத்யம் தியேட்டரில் இன்று நடந்தது.

நடிகர் சுதீப் முதல் இசை தட்டை வெளியிட, நடிகைகள் சினேகா, நமீதா, விமலாராமன் பெற்றுக் கொண்டனர்.

டிரைலரை இயக்குநர் அமீர் வெளியிட்டார். நடிகர்கள் பரத், அப்பாஸ், உதயா, வைபவ், சிட்டிபாபு, இயக்குனர் திருமலை, ‘6‘ படத்தின் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

Post a Comment