2007ல் ஏ.வி.எம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளியான படம், 'சிவாஜி'. ரஜினி, ஸ்ரேயா நடித்தனர். இப்போது அப்படத்தை 3டியில் மாற்றி, தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில், வரும் 12ம் தேதி ரஜினி பிறந்தநாளில் வெளியிட உள்ளனர். இதன் அறிமுக விழா நேற்று நடந்தது.
அப்போது வீடியோவில் தோன்றிய ரஜினி பேசியதாவது: நான் ஊரில் இல்லாததால், இந்நிகழ்ச்சியில் நேரில் கலந்துகொள்ள முடியவில்லை. 'சிவாஜி' படம் எவ்வளவு பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு, எவ்வளவு பெரிய வெற்றிப் படமாகவும் அமைந்தது என்று ரசிகர்களுக்குத் தெரியும்.
இப்போது அந்தப் படத்தை 3டி தொழில்நுட்பத்தில் மாற்றி வெளியிட உள்ளனர். பிரமாண்டத்துக்கு பிரமாண்டமாக 3டியில் மாற்ற அதிக செலவு செய்துள்ளனர். இவ்வளவு பெரிய பிரமாண்டத்துக்கு ஆன செலவை வைத்து, புதிதாக 2 படங்களை தயாரித்திருக்க முடியும்.
ஏ.வி.எம் புரொடக்ஷன்ஸ் 'சிவாஜி' 3டி படத்தை நூறு மடங்கு பிரமாண்டமாக உருவாக்கி, அதை வரும் 12ம் தேதி வெளியிடுகின்றனர். இது ரசிகர்களுக்கு என் பிறந்தநாள் பரிசாக அமையும் என்று நம்புகிறேன்.
இப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் ஏ.வி.எம் நிறுவனத்தாருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டு, இப்படம் மிகப் பெரிய வெற்றிபெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு ரஜினி பேசினார்.
விழாவில் ஏ.வி.எம்.சரவணன், எம்.எஸ்.குகன், அபர்ணா குகன், டைரக்டர்கள் ஷங்கர், எஸ்.பி.முத்துராமன், கே.வி.ஆனந்த், கவிஞர் வைரமுத்து, சுமன், ஜெயேந்திரா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
+ comments + 1 comments
IT IS A FOOLISH DRAMA,
BETTER TO GIVE SHIVAJI 3D FILM AS A BIRTHDAY GIFT
TRY TO DO SOCIAL WORKS TO THE POOR PEOPLE
RAJINI IS A GOOD BUISNESS MAN ONLY.........
Post a Comment