
வேட்டை திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், இயக்குனர் வெங்கட் பிரபு தாம் இயக்கம் புதிய படத்தில் ஆர்யா, விஷால், ஜெயம் ரவி மற்றும் ஜீவா ஆகிய நான்கு ஹீரோக்களையும் வைத்து இயக்க உள்ளதாக தெரிவித்திருந்தார். தற்போது ஒரு நிகழ்ச்சியின் போது பிரபுவின் கூற்றை அவருக்கு நினைவு படுத்தினார். அப்போது வெங்கட் பிரபு, அவ்வாறு படம் இயக்குவதற்கு மிகப்பெரிய கால்ஷீட் தேவைப்படும், இந்த நான்கு நாயகர்களின் கால்ஷீட்டையும் ஒரு சேர பெறவேண்டும் போன்ற காரணங்கள் உள்ளதால் தாமதமாவதாக கூறினார்.
சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவர், உங்களது அடுத்த படம் எவ்வாறு இருக்கும் என்று கேட்டார். அப்போது வெங்கட் பிரபு, தாம் இயக்க உள்ள அடுத்த படம் மங்காத்தா மற்றும் கோவா ஆகிய இரண்டு படங்களையும் கலந்து மிக அருமையான படம் தயாரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
Post a Comment