துள்ளிவிளையாடு படத்துக்கு யு சான்றிதழ்.. மார்ச் 29-ல் ரிலீஸ்!

|

Thulli Vilayadu Gets Clean U

வின்ஸ்டன் செல்வா இயக்கத்தில் உருவாகி வரும் துள்ளி விளையாடு படத்துக்கு சென்சார் குழு யு சான்றிதழ் அளித்துள்ளது.

வின்சென்ட் செல்வா இயக்க ஆர்.பி. ஸ்டூடியோஸ் தயாரிக்க யுவராஜ் -தீப்தி, பிரகாஷ்ராஜ், ஜெயபிரகாஷ், சென்றாயன், பரோட்டா சூரி ஆகியோர் நடித்துள்ள படம் துள்ளி விளையாடு.

படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து, வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டது. நேற்று இந்தப் படத்தை சென்சார் குழுவினருக்கு போட்டுக் காட்டினர் தயாரிப்பாளர்கள்.

படம் பார்த்த சென்சார் குழுவினர், எந்த கட்டும் இல்லாமல் க்ளீன் யு சான்று அளித்தனர்.

இதுகுறித்து படத்தின் இயக்குநர் வின்சென்ட் செல்வா கூறுகையில், "அனைத்துத் தரப்பினரும் பார்க்கும் வகையில் காதல், ஆக்ஷன் கலந்த விறுவிறுப்பான காட்சிகள் கொண்ட படமாக துள்ளி விளையாடு வந்துள்ளது. இந்தப் படம் சென்சார் குழுவுக்கே ரொம்பப் பிடித்துவிட்டது. எந்த கட்டும் தரவில்லை. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு முழுமையான திருப்தி அளிக்கும் இந்தப் படம்!," என்றார்.

வரும் மார்ச் 29-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது துள்ளி விளையாடு.

 

Post a Comment