சிங்கம் 2... தேவிஸ்ரீபிரசாத் இசையில் பாபா செகல்!

|

Baba Seghal Croons Singam 2

சிங்கம் 2 படத்துக்காக தேவிஸ்ரீபிரசாத் இசையில் தனது இரண்டு பாடல்களைப் பாடியுள்ளார் பாபா செகல்.

தண்டா தண்டா பாணி.. ஆல்பம் மூலம் பிரபலமானவர் பாபா செகல். சில படங்களில் நடிக்கவும் செய்துள்ளார்.

தமிழில் ஏற்கெனவே முப்பொழுதும் உன் கற்பனைகள், ஒஸ்தி, சகுனி, அலெக்ஸ் பாண்டியன் படங்களில் பாடியுள்ளார். தே்வி ஸ்ரீ பிரசாத் இசையில் சிங்கம் படத்தில் இடம்பெற்ற 'காதல் வந்தாலே...' பாடலைப் பாடியவர் பாபா செகல்தான். அந்தப் பாடல் பெரும் ஹிட் ஆனது.

இப்போது ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் சிங்கம் 2 படத்திலும் பாபா செகலைப் பாட வைத்துள்ளார் தேவி ஸ்ரீ பிரசாத்.

சிங்கம் 2 படத்தின் முக்கிய காட்சிகள் தென் ஆப்ரிக்கா, மலேசியா மற்றும் சென்னையில் படமாக்கப்பட்டுள்ளன. ஹாலிவுட் ஸ்டன்ட் நடிகர் டேனி சபானி இதில் சூர்யாவுடன் மோதுகிறார். விவேக்கும் சந்தானமும் இணைந்து காமெடி செய்துள்ளனர்.

அனுஷ்கா, ஹன்சிகா இருவரும் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்கள்.

 

Post a Comment