ஐஸ்வர்யா ராய் மகளுக்காக துபாயில் ரூ.54 கோடியில் ஓஹோன்னு ஒரு பங்களா

|

Aishwarya Rai Daughter Aaradhya Bachchan 54 Crore Gift

மும்பை: பெண் குழந்தை பிறந்தாலே உடனே புதிதாக நகை வாங்குவாங்கள். எல்.ஐ.சி பாலிசி போடுவார்கள். ஆனால்

ஐஸ்வர்யா ராய் தனது மகளுக்காக துபாயில் ஆடம்பர பங்களா ஒன்றினை வாங்கியிருக்கிறார்.

அந்த சொசுகு பங்களாவின் விலை அதிகமில்லை. ஜஸ்ட் 54 கோடி ரூபாய்தான் என்கின்றனர். ஆராத்யாவிற்கு இப்போதுதான் ஒரு வயது நிறைவடைந்துள்ளது.

பிறக்கும் போதே தங்கக் கரண்டியோடு பிறந்த இந்த பாப்பா, இப்போது 54 கோடி ரூபாய் பங்களாவிற்கு சொந்தக்காரியாகியுள்ளது. துபாய்க்குப் போனால் ஜாலியாக தங்கி பொழுதை கழிக்க இந்த பங்களாவை வாங்கியிருக்கின்றனராம்.

குட்டிப்பாப்பாவுக்கு இன்னும் என்ன பிடிக்கும் என்று ஐஸ்வர்யாவைக் கேட்டால்,ஜிதேந்திராவின் பாடல்கள் பிடிக்கும் என்கிறார். கொடுத்து வச்ச பாப்பாதான்!

 

Post a Comment