மும்பை: சென்னை எக்ஸ்பிரஸ் படப்பிடிப்பின்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தீபிகா படுகோனேவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
பாலிவுட் நடிகர் ஷாருக்கான், தீபிகா படுகோனே உள்ளிட்டோர் ரோஹித் ஷெட்டியின் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் நடித்து வருகின்றனர். தீபிகாவும் இந்தி நடிகர் ரன்வீர் சிங்கும் காதலிப்பதாக பேச்சாகக் கிடக்கிறது. ஆனால் இது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் வாய் திறக்கவில்லை. இந்நிலையில் இந்த செய்தி காற்றோடு சேர்ந்து ஷாருக்கான் காதில் விழுந்துள்ளது.
இதையடுத்து அவர் ரன்வீர் சிங்குடன் தீபிகாவை சேர்த்து பேசி கிண்டலடித்து வந்துள்ளாராம். முதலில் கண்டுகொள்ளாத தீபிகா பின்னர் கடுப்பாக்கிவிட்டாராம். அவர் எரிச்சலடைந்ததை உணர்ந்த ஷாருக் சாரி தீபிகா என்று மன்னிப்பு கேட்டதாகக் கூறப்படுகிறது.
தீபிகாவின் காதல் வாழ்க்கை பற்றி பலரும் பேசுவது அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
Post a Comment