பெண்கள் படும் பாடுகளை மையமாக வைத்து ஷான் பிலிம்ஸ் 'இரு கில்லாடிகள்' எனும் பெயரில் படம் தயாரிக்கிறது.
டென்மார்க் ஷான் என்பவர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். பயாஸ் என்பவர் ஹீரோவாகவும், புதுமுகம் சுவாதி ஹீரோயினாகவும் நடிக்கின்றனர்.
நாம் வாழும் இந்த உலகில், ஆணுக்கு சற்றும் சளைக்காத பெண் இனம் படும் துயங்கள், அதைத் தீர்க்கும் வழிகள் ஆகியவற்றை மையமாக வைத்து இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.
அறிவுமதி, மதிவதனன் பாடல்களை எழுதியுள்ளனர். அறிவுமதி எழுதிய,
"பெண்ணென்ன ஆண்களின் தின்பண்டமா,
வெறும் சுயமற்ற முகமற்ற சதைப் பிண்டமா.?
உயரத்தில் பெண்ணென்ன தரைமட்டமா?
அவர் கருவறைச் சாத்திட உயிர் கிட்டுமா?
பாடல் பெண் இனத்தை கவுரவப்படுத்தும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
கதை, வசனம், இசை, தயாரிப்பு, இயக்கம் ஆகிய பொறுப்புகளை டென்மார்க் ஷான் ஏற்றுள்ளார்.
மகளிர் மாதமான இந்த மார்ச்சில் படம் வெளியாகிறது.
Post a Comment