தொனாலிராமனைத் தொடர்ந்து 'ஆப்ரிக்காவில் வடிவேலு' - இயக்குகிறார் கேஎஸ் ரவிக்குமார்

|

முழு வீச்சில் மீண்டும் களமிறங்கிவிட்டார் வடிவேலு. அதுவும் காமெடியனாக அல்ல.. முழுமையான கதாநாயகனாக.

சட்டமன்றத் தேர்தல் முடிந்து இரண்டு ஆண்டுகள் 'அரசியல்' அஞ்ஞாதவாசத்துக்குப் பிறகு, இப்போது தெனாலிராமன் என்ற படத்தில் நடிக்கிறார் வடிவேலு. இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. யுவராஜ் இயக்குகிறார்.

இதற்குப் பிறகு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் முழுமையான காமெடிப் படம் ஒன்றில் நடிக்கிறார் வடிவேலு. இந்தப் படத்துக்கு ஆப்ரிக்காவில் வடிவேலு என்று தலைப்பிட்டுள்ளனர்.

ks ravikumar direct vadivelu

இதனை வடிவேலு சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார். இப்போது இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாரும் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து சமீபத்தில் அவர் விகடனுக்கு அளித்துள்ள பேட்டியில், "வடிவேலுவுக்காக ஒரு கதை கேட்டேன். ரஜினி சார் பயோகிராஃபி எழுதின காயத்ரி சொன்ன கதை அது.

கதை எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. வடிவேலுவும் கதையைக் கேட்டுட்டு வந்து என்னைப் பார்த்தார். 'பண்ணலாமாண்ணே'னு கேட்டாரு. சரின்னு சொல்லிட்டேன்.

இது பிரமாண்டமான படமா இருக்கும். இந்தப் படத்துக்கு சினிமாவை சினிமாவாப் பார்க்கிற தயாரிப்பாளர்கள் வேணும். வந்தா, பிரமாதமா பட்டையைக் கிளப்பலாம்," என்றார்.

படம்: விகடன்

 

Post a Comment