மீண்டும் ஒரே மேடையில் ரஜினி - கமல்!

|

Rajini Kamal Appear Again On Stage

பிரபு மகன் விக்ரம் பிரபுவுக்காக மீண்டும் ஒரு முறை மேடையேறுகிறார்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியும் உலக நாயகன் கமல் ஹாஸனும்.

சில மாதங்களுக்கு முன்பு கும்கி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்று, விக்ரம் பிரபுவை வாழ்த்தினர் இருவரும்.

அந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற்றுவிட்டது. இப்போது படம் நூறு நாள்களைத் தாண்டிவிட்டது.

இந்த வெற்றி விழாவையும் ரஜினி - கமல் தலைமையில் கொண்டாட விரும்பி, இருவருக்கும் அழைப்பிதழையும் வைத்துள்ளார் தயாரிப்பாளர் லிங்குசாமியும், ஹீரோவின் தந்தை பிரபுவும்.

கமல் வர ஒப்புக் கொண்டுள்ளாராம். ரஜினியும் வருவார் என்ற நம்பிக்கையுடன் விழா ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர்.

கடந்த முறை, விழாவுக்கு ரஜினியை அழைத்த போது முதலில் வர மறுத்துவிட்டார். அழைப்பிதழில் அவர் பெயரையும் விழாக் குழுவினர் போடவில்லை.

ஆனால் கடைசி நேரத்தில் மின்னலாய் மேடையில் தோன்றி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். இந்த முறையும் அதே போல செய்வார் சூப்பர் ஸ்டார் என்று எதிர்ப்பார்க்கின்றனர் பிரபுவும் லிங்குவும்.

 

Post a Comment