கோச்சடையானை வெளியிட்ட பிறகு ராணாவை ஆரம்பிக்கலாம் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொல்லியிருப்பதாக இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
கோச்சடையானுக்குப் பிறகு கேவி ஆனந்த் இயக்கத்தில் ரஜினி நடிப்பார் என்றார்கள். இதனை ஈராஸ் நிறுவனமும் அறிவித்தது.
ஆனால் கே வி ஆனந்த் இதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மீண்டும் ராணா பற்றிய பேச்சுகள் கிளம்பியுள்ளன.
ராணா படம் மட்டும் எடுக்கப்பட்டால், தமிழ் சினிமாவின் உச்சகட்ட பொழுதுபோக்குப் படமாக அமையும் என ரஜினியே தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம்.
இப்போது படம் குறித்து கேஎஸ் ரவிக்குமாரும் பேசியுள்ளார். படத்தின் இயக்குநர் இவர்தான்.
தனது அடுத்த படங்கள் குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "கோச்சடையான்' முடிந்த பிறகு 'ராணா' ஆரம்பிப்பது குறித்து பேசலாம்னு ரஜினி சார் சொல்லிட்டார்.
'பஞ்சதந்திரம் பார்ட் 2'னு பேச்சு வந்தது. ஆனா, அதிகாரபூர்வமா கமல் சார் தரப்பில் இருந்து யாரும் பேசலை," என்றார்.
கேஎஸ் ரவிக்குமார் இப்போது சாமி படத்தை இந்தியில் ரீமேக் செய்து கொண்டிருக்கிறார். அந்தப் படம் முடிந்ததும் வடிவேலு படத்தை எடுக்கிறார். பின்னர்தான் ராணாவைத் தொடங்குவார்கள் என்று தெரிகிறது.
+ comments + 1 comments
always expecting both pair it should be success in indian movies,i like more world super star rajini...
Post a Comment