எனது புதிய படத்துக்கான ஹீரோவை அறிவித்துவிட்டதாக வந்த செய்திகளில் உண்மையில்லை என்று இயக்குநர் மகிழ் திருமேனி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:
என் அடுத்த படத்துக்கான ஹீரோவின் பெயரை நான் அறிவித்திருப்பதாக வந்திருக்கும் செய்திகளை பார்க்க வேடிக்கையாக இருக்கிறது. என் அடுத்த படத்துக்கான ஹீரோவைக் குறித்து நான் எந்த பத்திரிக்கையாளரிடத்திலும் எந்த கருத்தையும் இதுவரை கூறவில்லை என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அப்படியாக வந்த தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.
மேற்கண்ட வதந்தியை பார்த்து அவசரப்பட்டு கருத்து கூறியவர்கள் அனைவரையும் தயவுசெய்து என் பெயரை இனிமேலும் இழுக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.
என்னை போலவே அவர்களுக்கும் வேறு எவ்வளவோ முக்கியமான பணிகள் இருக்கும் என நம்புகிறேன். என் அடுத்த படத்துக்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறேன். எனது அடுத்த படத்துக்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன்.
மேற்கொண்டு தகவல்களுக்கு என் பிஆர்ஓ ஜான்சனைத் தொடர்பு கொள்ளுங்கள்," என்று தெரிவித்துள்ளார்.
முன்தினம் பார்த்தேனே, தடையறத் தாக்க படங்களை இயக்கியவர் மகிழ் திருமேனி. அடுத்து ஆர்யாவை வைத்து தன் புதிய படத்தை ஆரம்பிக்கப் போகிறார் என சில தினங்களுக்கு முன் செய்தி வெளியாகி, அதை ஆர்யாவும் ஒப்புக் கொண்டிருந்தது நினைவிருக்கலாம்.
Post a Comment