இப்போதைக்கு என் கவனமெல்லாம் சினிமாவில்தான். அமெரிக்க காதலருடன் திருமணம் என்று வரும் செய்திகள் உண்மையில்லை என்று வழக்கம் போல மறுப்பு தெரிவித்துள்ளார் அசின்.
நடிகை அசின் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய இளைஞர் ஒருவரை காதலிப்பதாக செய்திகள் கிளம்பின கடந்த வாரத்திலிருந்து.
இந்த காதல் விரைவில் திருமணத்தில் முடியவிருப்பதாகவும், அதனாலேயே எந்த இந்திப் படத்தையும் அவர் ஒப்புக் கொள்ளவில்லை என்றும் கூறப்பட்டது.
அடிக்கடி அமெரிக்கா போய் காதலரைச் சந்தித்துவிட்டு வரும் அசின், கடைசியாக தமிழில் பிரமாண்ட படம் ஒன்றில் மட்டும் நடித்துவிட்டு பை சொல்லப் போகிறார் என்று செய்திகள் வந்தன.
ஆனால் இதனை அசின் வழக்கம் போல மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள விளக்கம்:
'அசினுக்கும் அமெரிக்க காதலருக்கும் திருமணம் என்ற செய்தியை மறுக்கிறோம். அசினின் முழுகவனமும் சினிமாவில்தான் இருக்கிறது. எனவே அசினுக்கு இப்போது திருமணம் இல்லை. புதுப்படங்கள் குறித்து விரைவில் தெரிவிப்போம்,'' என்றார்.
காதல் முத்தினா கடைத் தெருவில் போஸ்டராக தொங்கித்தானே தீர வேண்டும்!
Post a Comment