சென்னை: தன் நாட்டுக்காகப் போராடும் தலிபான்களைத் தவறாக சித்தரிக்கும் விஸ்வரூபம் தவறான படம்தான். விடுதலைப் புலிகளைப் போலத்தான் தலிபான்களும்... - இப்படிக் கூறியிருப்பவர் இயக்குநர் அமீர்!
விஸ்வரூபம் படம் பல்வேறு பரபரப்புகளை, சர்ச்சைகளைக் கிளப்பி, ஒருவழியாக வெளியாகி ஓடி முடிக்கும் சூழலில், மீண்டும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் இயக்குநர் அமீர்.
சமீபத்திய பேட்டி ஒன்றில், "விஸ்வரூபம்' படத்தில் இஸ்லாமியர்கள் தவறாக சித்தரிக்கப்படவில்லை. ஆனால் தலிபான் போராளிகள் தவறாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஆப்கன் மக்களுக்காகவும், அவர்களின் உரிமைகளை மீட்கவும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடும் ஒரு போராளியை விஸ்வரூபத்தில் தவறாகச் சித்தரித்திருக்கிறார்கள்.
எப்படி ஈழத்திற்காகப் போராடிய போராளிகளான பிரபாகரனையும் அவரது கூட்டாளிகளையும் தவறாக சித்தரிச்சா என்ன வருமோ அதுதான் விஸ்வரூபம்.
எப்படி இந்த போராளிகளை தீவிரவாதிகள் என்று சொல்லக் கூடாதோ அப்படித்தான் தலிபான் போராளிகளையும் தீவிரவாதிகள் என்று காட்டக் கூடாது. ஆனால் இங்குள்ள அமைப்புகளோ, கட்சிகளோ இதை எதிர்க்காமல் விட்டு விட்டார்கள்.
இப்போதுதான் அது பற்றிய விவாதத்தை வைத்திருக்க வேண்டும். யாரும் செய்யவில்லை. ஆக, விஸ்வரூபம் படத்தின் மூலம் தன் மண்ணுக்காகப் போராடும் தலிபான் போராளிகளை தவறாகச் சித்தரித்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை," என்று கூறியுள்ளார்.
+ comments + 1 comments
What a Brilliant Gentle Man Mr. Ameer....!
What Mr. Hassan faced a issue, now its crystal clear who was behind. Well as everybody indirectly supports Talibans. This is the base for ban Vishwaroopam.
Post a Comment