சென்னை: சினிமாத் துறையில் ஆண்களின் ஆதிக்கம் அதிகளவில் இருப்பதாக திரைப்பட இயக்குனர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மும்பை பெண்கள் சர்வதேச திரைப்பட விழா தொடர்பாக இன்று செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், திரைப்பட நடிகை விஜி சந்திரசேகர், இயக்குனர் நந்தினி, லட்சுமி ராமகிருஷ்ணன் குட்டி பத்மினி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். இதில் கலந்துகொண்டு பேசிய லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியதாவது:
சினிமாவில் நடிகர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம், கதாபாத்திரம், மரியாதை ஆகியனவற்றை நடிகைகளுக்கு தருவதில்லை. கூலித் தொழிலாளிகளுக்கு ஊதியம் வழங்குவதில் பாகுபாடு காட்டுப்பட்டு வந்தது. அதற்கு ஆண்கள் உடல் ரீதியாக அதிக பலம் பொருந்தியவர்கள் என்ற சப்பை கட்டும் கூறப்பட்டு வந்தது ஆனால் முழுக்க முழுக்க திறமை சார்ந்தது. ஆனால் இங்கும் ஏன் இந்தப் பாகுபாடு காட்டப்படுகிறது என்றார்.
இதேபோல் இயக்குநர் நந்தினி பேசுகையில் சிறு வயதிலிருந்தே ஆண் குழந்தைகளுக்கு பெண்களை மதிக்க வேண்டும், அவர்களை அடிக்கவோ துன்புறுத்தவோ கூடாது என்ற படிப்பினையை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
Post a Comment