அமலா பால் ஹீரோயினாக நடிக்கத் தொடங்கியது வீரசேகரன் என்ற படு சிம்பிள் பட்ஜெட் படம் என்பது யாருக்காவது நினைவிருக்கிறதா..!
அந்தப் படத்தில் அமலாவுக்கு சம்பளமென்று எதுவும் கிடையாது. பேட்டா, சாப்பாடு இன்ன பிற சலுகைகளோடு சரி. தனி ஹீரோயினாக அறிமுகம் கிடைப்பதே பெரிய விஷயமென்று நடித்தார்.
அடுத்த படம் சிந்து சமவெளி. படு பச்சையான காட்சிகள். ஆனால் கரன்சி மட்டும் ரொம்ப வறட்சியாகவே இருந்தது அம்மணிக்கு.
மைனாவில் நடித்த போதுகூட அமலாவுக்கு சிறப்பான சம்பளம் என்று எதையும் தரவில்லையாம். ஒருசில லட்சங்கள்தான்.
ஆனால் அந்தப் படம் வந்த பிறகு வட்டியும் முதலுமாக உயர்த்தினார் சம்பளத்தை, அமலா.
தெய்வத் திருமகள், காதலில் சொதப்புவது எப்படி, வேட்டை போன்ற படங்களில் அவரது சம்பளம் ரூ 50 லட்சத்தைத் தொட்டது.
இப்போது நிழல்கள் ரவி, விஜய் ஜோடியாக நடித்து வரும் நிலையில், தனது சம்பளத்தை தானாகவே ஒரு கோடிக்கு உயர்த்திவிட்டாராம்.
தெலுங்கில் ராம்சரணுடன் நடிக்கும் படம் மற்றும் அல்லு அர்ஜூன் படங்களில் இதுதான் அவரது புதிய சம்பளமாம்.
தமிழில் அடுத்து யார் ஒப்பந்தம் செய்தாலும், லட்சங்களில் சிக்காது இந்த மைனா... கோடி கொடுத்தால்தான் உண்டு!
Post a Comment