புகை, மது போன்றவற்றை அறவே விட்டுவிட்டு முன்னிலும் ஆரோக்கியமாகவும் இளமையோடும் திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினி, அவற்றைத் தொட வேண்டாம் என தன் ரசிகர்களுக்கும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்.
இப்போது அவர் தனது அடுத்த இமயமலைப் பயணத்துக்கு தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
ஆனால் அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, இந்தப் பயணத்தை தள்ளிப் போட வேண்டுமென்று வீட்டில் சொல்கிறார்களாம். ஆனால் நண்பர்களுடன் வேண்டுமானால் போய் வரட்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறியுள்ளார்களாம். எனவே கோச்சடையான் ரிலீசுக்கு முன் அல்லது பின் இந்தப் பயணம் குறித்து செய்திகள் வரலாம்.
இப்போதைக்கு ரஜினி பெரும்பாலும் தன் ராகவேந்திரா திருமண மண்டபத்தில்தான் நேரத்தைச் செலவிடுகிறார். முன்னெப்போதையும்விட அதிக அளவு நண்பர்களைச் சந்திக்கிறார். பேசிக் கொண்டிருக்கிறார்.
சமயத்தில் மண்டபத்தில் நடக்கும் ரசிகர்களின் திருமணங்களுக்கு சர்ப்ரைஸ் விசிட்டும் பரிசும் கொடுத்து திக்குமுக்காட வைக்கிறார். ரொம்ப பிரயத்தனப்பட்டு தன்னைச் சந்திக்த ஆர்வம் காட்டும் ரசிகர்களையும் அவர் தவிர்ப்பதில்லை.
எப்போதாவது ஒரு முறை கேளம்பாக்கம் பண்ணை வீட்டுக்கும் சென்று கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கிறாராம்!
அடுத்த படம் குறித்த யோசனை தீவிரமாக ஓடிக் கொண்டிருக்கிறதாம் அவர் மனதில். கேவி ஆனந்த், கேஎஸ் ரவிக்குமார் ஆகிய இருவர்தான் இப்போதைக்கு ரேஸில் இருக்கிறார்கள். ரஜினியே சொல்லும் வரை இந்த ரேஸ் தொடரும்!
Post a Comment