சமீபத்தில் வெளியான ஒரு படத்தின் பிரிவியூ காட்சியின்போது தந்தையுடன் படம் பார்த்த நடிகை இனியா, தான் நடித்த கவர்ச்சிக் காட்சிகள் வந்தபோது வெளியே வந்துவிட்டாராம், வெட்கம் தாளாமல்.
இரு வாரங்களுக்கு முன் வெளியான படம் கண்பேசும் வார்த்தைகள். செந்தில் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இனியா நடித்திருந்தார்.
சமீபத்தில் இந்தப் படத்தின் பத்திரிகையாளர் காட்சி சென்னை பிரசாத் லேபில் நடந்தது.
இந்தக் காட்சிக்கு தன் அப்பாவோடு வந்திருந்தார் இனியா. படம் பார்க்க அமர்ந்த இனியாவுக்கு தான் நடித்த சில கவர்ச்சிக் காட்சிகளை தன்னாலேயே பார்க்க முடியவில்லையாம். உடன் அப்பா வேறு இருந்ததால், வெட்கத்தில் நெளிந்தபடி வெளியேறிவிட்டாராம்.
இப்படி நான்கைந்து முறை நடந்ததை பக்கத்திலிருந்த மற்றவர்களும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இந்த வெட்கம் நடிக்கும் போதே இருந்தால் இத்தனை சங்கடம் வராதே என்று கமெண்டும் அடித்தனர்.
என்ன பண்ணுவது.. நடிக்கும் போது பிகு பண்ணால் அந்த வேடத்துக்கு வர ஆயிரம் கவர்ச்சிக் கன்னிகள் தயாராக உள்ளார்களே!
Post a Comment