ஆர்யா, பிரேம்ஜி, அஞ்சலி, ஹன்சிகா, சந்தானம் என பெரும் நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ள சேட்டை இன்று வெளியாகிறது.
இந்தியில் வெளியான டெல்லி பெல்லியின் தமிழ் ரீமேக்தான் சேட்டை. இந்தப் படத்துக்கு சென்சாரில் யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
யுடிவி தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, தமன் இசையமைத்துள்ளார். தனஞ்செயனின் ஆஸ்தான இயக்குநர் எனும் அளவுக்கு மாறிவிட்ட ஆர் கண்ணன் இயக்கியுள்ளார்.
இந்தப் படம் ஆர்யாவுக்கு மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு அவர் நடித்து வெளியான ஒரே படம் வேட்டை. அதையும் இந்த யுடிவிதான் தயாரித்திருந்தது. ஒன்றும் சொல்லிக் கொள்கிறமாதிரி வெற்றி பெறவில்லை.
இப்போது ஆர்யா ரூ 5 கோடி சம்பளமாகப் பெறுகிறார். சேட்டையின் வெற்றியைப் பொருத்துதான் அந்த 5 கோடி தொடருமா குறையுமா என்பது தெரியும்.
பிரேம்ஜிக்கு கிட்டத்தட்ட ஆர்யாவுக்கு இணையான வேடம். உடன் சந்தானம் வேறு நடித்திருப்பதால், நகைச்சுவை அடிப்படையில் படம் பாக்ஸ் ஆபீஸில் வென்றுவிடும் என நம்புகிறது கோலிவுட்.
தமிழகம் முழுவதும் 510 அரங்குகளில் வெளியாகிறது.
Post a Comment