ஆஸ்திரேலியாவில் சூதாடிய அமலா பால்!

|

Amala Paul Wins Gambling Sydney

தலைவா படத்துக்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள அமலா பால், அங்கு நடிகர் சுரேஷுடன் சேர்ந்து சூதாடி பணம் ஜெயித்தாராம்.

விஜய் நடிக்க, விஜய் இயக்கும் புதிய படம் தலைவா. சந்திரபிரகாஷ் ஜெயின் தயாரிக்க, ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் விஜய்க்கு இரு ஜோடிகள். ஒருவர் அமலா. மற்றவர் ராகிணி நந்த்வனி.

இப்போது படப்பிடிப்பு ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. விஜய்யுடன் இரு நாயகிகளும் ஆஸ்திரேலியா சென்றுள்ளனர்.

போன இடத்தில் படப்பிடிப்பு முடிந்ததும் போரடித்ததாம் அமலாவுக்கு. அப்படியே சுற்றிப் பார்க்கக் கிளம்பியவர் சூதாட்ட கிளப்புக்குள் நுழைந்து, ஒரு ஆட்டம் ஆடினாராம்.

முதலில் ஆடியபோது சறுக்கினாலும், அடுத்து நடிகர் மொட்டை சுரேஷுடன் இணைந்து ஆடி கேமை வென்றாராம்.

இதனை பெருமையாக சொன்ன அமலா பால், சூதாட்டத்தில் எனக்கு ரொம்ப லக்கி ஜோடி சுரேஷ்தான். நானும் அவரும் ஒரு ஆட்டத்தில் வென்றோம் என்று கூறியுள்ளார்.

 

Post a Comment