நடிகை லட்சுமிராய் தனது 25 வது பிறந்த நாளை நடுக்கடலில், ‘கேக்' வெட்டி கொண்டாடினார்.
ஐ.பி.எல் மேட்ச் ஆரம்பித்தாலே டோணி - லட்சுமி ராய் கிசு கிசு ஆரம்பித்து விடும். அந்த அளவிற்கு சென்னையில் டோணியுடன் பைக்கில் சுற்றியவர் லட்சுமி ராய்.
திருமணத்திற்குப் பின்னர் இந்த கிசு கிசு இல்லை என்றாலும் மே 5ம் தேதி பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது லட்சுமி ராய்க்கு டோணியின் நினைவு வராமல் இருக்காது.
லட்சுமிராய் தனது பிறந்த நாளை ஒவ்வொரு வருடமும் மிக சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு பிறந்தநாளை நடுக்கடலில், கொண்டாட முடிவு செய்தார்.
இதற்காக, மும்பையில் உள்ள தனது குடும்பத்தினருடன் 2 படகுகளில் ஏறி நடுக்கடலுக்குச் சென்றனர். அங்கே லட்சுமிராய் ‘கேக்' வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருடைய குடும்பத்தினர் அவரை வாழ்த்தி, பிறந்த நாள் பாடலை பாடினார்கள். பின்னர், லட்சுமிராயும் குடும்பத்தினரும் பத்திரமாக கரைக்கு திரும்பினார்கள்.
பெங்களூரை சேர்ந்த லட்சுமி ராய்க்கு மும்பையிலும் சொந்தமாக வீடு இருக்கிறது. இப்போது மும்பையில் உள்ள அந்த வீட்டில்தான் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
Post a Comment