இயக்குநர் பாலாவும் நடிகர் விக்ரமும் மூன்றாம் முறையாக இணைகிறார்கள். ஷங்கரின் ஐ படத்தை முடித்த கையோடு இந்தப் படத்தில் நடிக்கிறாராம் விக்ரம்.
விக்ரம், பாலா இருவருமே திரையுலகில் ஒன்றாகத்தான் வாழ்க்கையைத் தொடங்கினார்கள். பாலாவை விட பத்தாண்டுகள் முன்பே சினிமாவில் நடிக்க ஆரம்பித்தாலும், சேது படம்தான் இருவருக்குமே பெரிய பிரேக் ஆக அமைந்தது.
தொடர்ந்து பிதாமகன் படத்தில் பாலாவும் விக்ரமும் சிகரம் தொட்டனர். இந்தப் படம் விக்ரமுக்கு தேசிய விருதினைப் பெற்றுத் தந்தது. தமிழ் சினிமாவின் முக்கிய படமாகக் கருதப்படுகிறது.
அதன் பிறகு நான் கடவுள், அவன் இவன், பரதேசி என மூன்று படங்களைச் செய்துவிட்டார் பாலா. ஆனால் இருவரும் மீண்டும் இணையவில்லை.
இப்போது பாலாவும் விக்ரமும் மீண்டும் கைகோர்க்க திட்டமிட்டுள்ளனர். இந்தப் படத்துக்கு, பரதேசி பட ஒளிப்பதிவாளர் செழியன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஜிவி பிரகாஷ்குமாரே இந்தப் படத்துக்கும் இசை அமைக்கிறார். முதல் முறையாக நகரத்துப் பிரச்சினைகளை மையப்படுத்தி இந்தப் படத்தை உருவாக்குகிறார் பாலா. படம் குறித்த பிற விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.
Post a Comment