யுடிவி தயாரிக்கும் சிகரம் தொடு படம் இமயமலையில் ஹரித்வார் அருகே தொடங்கியது.
தூங்கா நகரம் படத்தை இயக்கிய கவுரவ் இயக்கும் இரண்டாவது படம் சிகரம் தொடு. சேட்டை படத்துக்குப் பிறகு யுடிவி இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
விக்ரம் பிரபு - மோனா கஜ்ஜார் ஜோடியாக நடிக்க, இவர்களுடன் சத்யராஜும் எதிர்நீச்சல் சதீஷும் நடிக்கின்றனர். கோவை சரளா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
விஜய் உலகநாதன் ஒளிப்பதிவு செய்ய, பிரவீண் ஸ்ரீகாந்த் எடிட்டிங்கை கவனிக்கிறார். டி இமான் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பை சென்டிமென்டாக இமயமலையில் உள்ள ஹரித்வார் சண்டிதேவி ஆலயத்தில் சமீபத்தில் நடந்தது. தொடர்ந்து பத்து நாட்கள் இந்தப் பகுதியில் ஷூட்டிங் நடக்கிறது.
படம் குறித்து யுடிவியின் தெற்கு பொறுப்பாளர் தனஞ்செயன் கூறுகையில், "இந்தப் படத்தின் ஸ்க்ரிப்ட் ரொம்ப அருமையாக வந்திருக்கிறது. வேக வேகமாக படப்பிடிப்பு நடக்கிறது," என்றார்.
Post a Comment