மும்பை: தனது அம்மா தன்னை விளக்குமாறால் அடித்துள்ளதாக பாலிவுட் நடிகை கங்கனா ரனௌத் தெரிவித்துள்ளார்.
அன்னையர் தினத்தை முன்னிட்டு பி அன்ட் ஜி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகை கங்கனா ரனௌத் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது,
நான் சிறுபிள்ளையாக இருக்கையில் அம்மா ஆஷா என்னை விளக்குமாறால் அடித்துள்ளார். அனைத்து தாய்மார்களும் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல உணவு கொடுத்து பாட்டு பாடி தூங்க வைப்பார்கள். ஆனால் என் அம்மா எனக்காக பாட்டு பாடியதாக ஞாபகமே இல்லை. எங்கம்மா ரொம்ப ஸ்டிரிக்ட். என் அம்மா ஒரு சமஸ்கிருத ஆசிரியை. பள்ளியில் அவரைப் பார்த்து மாணவ-மாணவியர் பயப்படுவார்கள்.
என் அம்மா எனக்கு நடிப்பைத் தவிர எல்லாமே சொல்லிக் கொடுத்திருக்கிறார். எனக்கு பாத்திரம் தேய்க்கத் தெரியும், சமைக்கத் தெரியும். சினிமா ஒத்து வரவில்லை என்றாலும் நான் பிழைத்துக் கொள்வேன். திருமணமாகிப் போகிற வீட்டில் எங்கள் பெயரைக் கெடுக்கப் போகிறாய் என்று என் அம்மா தெரிவித்தார் என்றார்.
Post a Comment