100 வயது ‘அல்சமீர்’ ரசிகைக்கு பிறந்தநாள் வாழ்த்து வீடியோ அனுப்பிய அமிதாப்

|

100 வயது ‘அல்சமீர்’ ரசிகைக்கு பிறந்தநாள் வாழ்த்து வீடியோ அனுப்பிய அமிதாப்

மும்பை: அல்சமீர் நோயால் பாதிக்கப்பட்ட 100 வயது ரசிகை ஒருவருக்கு பிறந்தநாள் வாழ்த்தை வீடியோ மூலம் அனுப்பி, அவரை குஷிப்படுத்தியுள்ளார் அமிதாப்.

பாலிவுட் மெகா சூப்பர்ஸ்டாரான அமிதாப்க்கு சமீபத்தில் ஒரு கோரிக்கை விண்ணப்பம் வந்தது. அதில், பெர்ண்டைன் டி'சௌவ்சா என்ற 100 வயது பாட்டி ஒருவர் தீவிர அமிதாப் ரசிகை எனவும், அவர் தற்போது அல்சமீர் நோயால் பாதிக்கப் பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டிருந்தது. மேலும், ஆகஸ்ட் 18ம் தேதி பெர்ண்டைன்னின் 100வது பிறந்தநாள், அதற்கு தாங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தால் அவர் மிகவும் மகிழ்ச்சியடைவார் என்வும் கோரிக்கை விடப்பட்டிருந்தது.

அல்சமீர் நோயால் பாதிக்கப் பட்டிருந்தாலும் பெர்ண்டைனிற்கு அமிதாப் பெயர் மட்டும் இன்னும் நினைவில் உள்ளதாம். அமிதாப் வந்து பார்ப்பார் என்ரு சொல்லிச் சொல்லி தான் அவரை சாப்பிட, உறங்க வைக்கிறார்களாம் அவரது குடும்பத்தார்.

இதனைக் கேள்விப்பட்ட அமிதாப் உடனடியாக, பெர்ண்டைன்னை வாழ்த்தி ஒரு வீடியோ மெசேஜ் அனுப்பி வாழ்த்தியுள்ளார் தனது ரசிகையை. இது குறித்து தனது பிளாக்கில் பின்வருமாறு கூறியுள்ளார் அமிதாப்....

ஆகஸ்ட் 18ம் தேதியோடு 100 வயதைத் தொடும் பெர்ண்டைன் பற்றிக் கேள்விப்பட்டேன். அல்சமீர் நோயால் பாதிக்கப் பட்டிருந்த போதும், அவர் என்னை மட்டும் நினைவில் கொண்டிருப்பது ஆச்சர்யமாகவும், அதேசமயம் மிகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. அவரை வாழ்த்தும் படி அவரது குடும்பத்தினர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவரை வாழ்த்தி வீடியோ வாழ்த்து அனுப்பியுள்ளேன். நான் வருவேன் எனக் கூறி ஏமாற்றியே அவரை சாப்பிட, தூக்க வைப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது' எனத் தெரிவித்துள்ளார்.

 

Post a Comment