இதான் யதார்த்தமான பாசம்.. நிஜமான தங்க மீன்! - ஷாமின் '6' படத்துக்கு குவியும் பாராட்டு

|

ஒரு இளம் தம்பதி... அவர்களுக்கு ஒரு அழகான மகன்... ஒரு நாள் காணாமல் போகிறான்... அவனைத் தேடி அலைகிறான் தந்தை.. அந்த அலைச்சலில் வெளிவரும் பயங்கரங்கள்...

-இதுதான் ஷாம் நடித்துள்ள 6 (6 மெழுகுவர்த்திகள்) படம்.

இதான் யதார்த்தமான பாசம்.. நிஜமான தங்க மீன்! - ஷாமின் '6' படத்துக்கு குவியும் பாராட்டு

இந்தப் படத்தின் செய்தியாளர் காட்சி நேற்று சென்னை பிரசாத் லேபில் நடந்தது. யாருக்கும் பெரிதாக எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லை. காரணம், 'மகனுக்கு தரும் முத்தம் ஏதாவது ஒன்றில் சேர்த்தியில்லை..' என்பது போன்ற அபத்தமான விளம்பரங்கள், அதற்கு அறிவு ஜீவி கூட்டத்தின் ஆதரவு என தடபுடல் இலவச விளம்பரங்கள் எதுவும் இல்லாமல் படம் வெளியாகியிருந்ததுதான்!

முதல் பாதி படம் முடிந்தபோதுகூட பெரிதாக எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை, படம் பார்த்தவர்கள்.

படம் முடிந்த பிறகு, பலரும் வெளிப்படையாக உதிர்த்த கமெண்ட், 'இதுதான் நிஜமான பாசம்... ஒரு அப்பா தன் மகளாக இருந்தாலும் மகனாக இருந்தாலும் இப்படித்தான் நடந்து கொள்வார்... அந்த யதார்த்தத்தை முடிந்தவரை சரியாகவே காட்டியிருக்கிறார்கள்... ஷாமும் மிகையாக நடிக்காமல் கவர்ந்துவிட்டார்," என்பதே.

இதான் யதார்த்தமான பாசம்.. நிஜமான தங்க மீன்! - ஷாமின் '6' படத்துக்கு குவியும் பாராட்டு

சமூக வலைத் தளங்களில் வெளிப்படையாகவே, 'இதுதான் நிஜமான தங்க மீன்,' என சினிமா ஆர்வலர்கள் கமெண்ட் எழுதி வருகின்றனர்.

ஷாம், இந்தப் படம் மூலம் ஒரு தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார்.

படம் குறித்து ஷாமிடம் பேசியபோது, "நான் 12பி-க்குப் பிறகு நடிச்ச இரண்டாவது படமா இதை நினைச்சிக்கிறேன். அவ்வளவு உழைப்பு. இரண்டரை ஆண்டுகள் இந்தப் படத்துக்காக முழுசா உழைச்சிருக்கேன். ப்ளீஸ் என்னை சப்போர்ட் பண்ணுங்க.. இனி எண்ணிக்கைக்காக இல்லாமல், நல்ல படங்களுக்காக உழைப்பையும் பொருளையும் தருவேன்," என்றார்.

இந்தப் படத்தில் ஒரு நடிகராக பாராட்டுப் பெறும் ஷாம், தயாரிப்பாளராகவும் தப்பித்துவிடுவார் என்கிறது சினிமா வட்டாரம்.

 

Post a Comment