சென்னை: மூத்த மற்றும் இளம் நடிகர்கள் கடும் எதிர்ப்பு காரணமாக குமரி முத்துவை நடிகர் சங்கத்திலிருந்து நீக்கும் முடிவை மறுபரிசீலனை செய்வதாகவும், அவரை மீண்டும் சங்கத்தில் சேர்த்துக் கொள்வதாகவும் இறங்கி வந்திருக்கிறது சரத்குமார் தலைமையிலான நடிகர் சங்கம்.
நேற்று சென்னையில் நடந்த நடிகர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இப்போது சங்கத்தில் சரத்குமார் தலைமைக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எதிர்ப்பும் வலுத்துள்ளது. விஷால் போன்ற நடிகர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படையாக தெரிவித்த நிலையில் பொதுக்குழு கூடியது.
இதில் ரஜினி, கமல் பங்கேற்பார்கள் என்று கூறியிருந்தனர். ஆனால் எதிர்ப்பார்த்தது போலவே இருவரும் வரவில்லை.
கூட்டத்தில் பல்வேறு பிரச்சினைகளைப் பேசினார்கள். குமரிமுத்து நீக்கம்தான் பெரிதாகப் பேசப்பட்டது. அவரை நீக்கியது சங்கத்தின் தலைவர் சரத்குமார், செயலர் ராதாரவியின் தன்னிச்சையான முடிவு என்று மூத்த நடிகர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக சிவக்குமார், நாசர், விஷால் போன்றவர்கள் குமரிமுத்து நீக்கத்தை கடுமையாக எதிர்க்க, கடைசியில் வேறு வழியின்றி குமரிமுத்துவை மீண்டும் சேர்க்க ஒப்புக் கொண்டாராம் சரத்குமார்.
கட்டட பிரச்சினை உள்பட மற்றவற்றை சுமூகமாக பேசியதாகவும், ஒத்துழைத்த சக உறுப்பினர்களுக்கு நன்றி என்றும் கூறி கூட்டத்தை முடித்தார் சரத்குமார்.
Post a Comment