துபாயில் நடைபெற்ற விருது வழங்கும் அப்பா கமல்ஹாசனின் பாடலுக்கு ஆட்டம் போட்ட ஸ்ருதிஹாசனுக்கு முட்டிக்காலில் காயம் ஏற்பட்டுவிட்டதாம்.
இசையின் மீதுள்ள ஆர்வத்தினால் உன்னைப் போல் ஒருவன் திரைப்படத்திற்கு இசையமைத்தவர் ஸ்ருதி. பின்னர் நடிகையாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார்.
திரைப்படங்களில் இவரின் நடனம் அனைவராலும் பாராட்டப்படுகிறது. இந்த நிலையில் துபாயில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற சிமா திரைப்பட விருது வழங்கும் விழாவில் நடனமாடினார்.
அப்பா கமலின் பாடலுக்கு அவரைப் போலவே ஆடினாராம் ஸ்ருதி. இதற்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
ஸ்ருதியின் நடன அசைவுகள் வேகமாகவும், செய்வதற்குக் கடினமாகவும் இருந்தன. ஆனாலும் அனைத்தையும் மேடையில் செய்து காட்டி ஸ்ருதிஹாசன் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார். ஆனால், இதன் விளைவாக அவரது கால் முட்டி பாதிக்கப்பட்டு விட்டதாம். இதனால் தற்போது ஓய்வில் இருக்கிறாராம் ஸ்ருதி.
Post a Comment