கார்த்தி படங்களை ரூ.23 கோடி கொடுத்து அள்ளிய சன்டிவி

|

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள பிரியாணி, ஆல் இன் ஆல் அழகுராஜா படங்களின் சேட்டிலைட் உரிமங்களை ரூ. 23 கொடுத்து வாங்கியுள்ளதாம் சன்டிவி. இதனால் மகிழ்ச்சியடைந்துள்ளாராம் கார்த்தி.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் கே.ஞானவேல்ராஜா தயாரித்துள்ள படங்கள் பிரியாணி, ஆல் இன் ஆல் அழகுராஜா.

இரண்டு படங்களிலுமே கார்த்திதான் ஹீரோ. பிரியாணி படத்தை வெங்கட்பிரபு இயக்கியுள்ளார். இதில் கார்த்திக்கு ஜோடி ஹன்சிகா' யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசை அமைத்துள்ளார்.

கார்த்தி படங்களை ரூ.23 கோடி கொடுத்து அள்ளிய சன்டிவி

'ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் காஜல் அகர்வால் ஜோடியாக நடித்துள்ளார், ராஜேஷ் இயக்கி இருக்கிறார்.

'பிரியாணி' தான் தீபாவளிக்கு ரிலீஸாவதாக இருந்தது. ஆனால், படத்தைப் பார்த்த கார்த்தி தரப்பினருக்கு அதிருப்தி ஏற்படவே, மீண்டும் சில காட்சிகளை எடுக்கப் போகின்றனர்.

இதனால், 'ஆல் இன் ஆல் அழகுராஜா'வை அவசர அவசரமாக முடித்து தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப் போகிறார்கள். இந்த ரெண்டு படங்களையும் ரூ.23 கோடி கொடுத்து வாங்கியிருக்கிறதாம் சன் டி.வி.

 

Post a Comment