நய்யாண்டி இயக்குநர், தயாரிப்பாளர் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற்றார் நஸ்ரியா

|

சென்னை: இயக்குநர் சற்குணம் மற்றும் தயாரிப்பாளர் கதிரேசன் மீது கொடுத்த புகாரை இன்று வாபஸ் பெற்றார் நடிகை நஸ்ரியா.

தனது தொப்புளைக் காட்டும் சீனுக்கு அனுமதியில்லாமல் டூப் போட்டு எடுத்தார் என சற்குணம் மீதும், கதிரேசன் மீதும் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கூறியிருந்தார் நஸ்ரியா.

ஆனால் படத்தின் ட்ரைலரிலிருந்து சர்ச்சைக்குரிய அந்தக் காட்சி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து சற்குணத்திடம் மன்னிப்பு கேட்டு, சமரசம் ஆகிவிட்டார் நஸ்ரியா.

நய்யாண்டி இயக்குநர், தயாரிப்பாளர் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற்றார் நஸ்ரியா  

இதனை செய்தியாளர்களிடமும் தெரிவித்த நஸ்ரியா, இன்று கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகாரை வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.

'இந்த புகாருக்கு இனி வேலையில்லை. படம் பார்க்காமல் நான் புகார் கொடுத்துவிட்டேன். எனவே அதை இப்போது வாபஸ் பெற்றுக் கொள்கிறேன்," என்றார்.

மீண்டும் படத்தில் நடிக்க சற்குணம் அழைத்தால் நடிப்பீர்களா என்று அவரிடம் கேட்டனர். 'நிச்சயமாக நடிப்பேன்...எனக்கு அவருடன் எந்தப் பிரச்சினையும் இல்லை' என்றார்.

அது சரி!

 

Post a Comment