‘அரண்மனை’ படப்பிடிப்பு... முதல் முறையாக பதட்டமடைந்த ஹன்சிகா

|

சென்னை: முதன்முறையாக பதற்றமாக உணர்வதாக தனது அரண்மனைப் படப்பிடிப்பு முதல்நாள் அனுபவம் குறித்து ட்விட்டரில் தெரிவித்துள்ளார் ஹன்சிகா.

ஏற்கனவே, சுந்தர்.சி இயக்கத்தில் ஹன்சிகா மோத்வானி தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து சுந்தர்.சியின் அடுத்தப் படைப்பான அரண்மனையிலும் ஹன்சிகா நடிக்க ஒப்பந்தமானார்.

கடந்த 6 ஆம் தேதி அரண்மனை படத்தின் படப்பிடிப்புத் தொடங்கியது. பொதுவாக குடும்பக் காமெடிப் படங்களை இயக்கி ரசிகர்களின் வயிற்றைப் பதம் பார்க்கும் சுந்தர்.சியின் முதல் சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் படம் தான் ‘அரண்மனை'.

‘அரண்மனை’ படப்பிடிப்பு... முதல் முறையாக பதட்டமடைந்த ஹன்சிகா

இப்படத்தில் சுந்தர் சி., வினய் இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். ஹன்சிகா, லட்சுமி ராய், ஆண்ட்ரியா என மூன்று ஹீரோயின்கள். இதில் யார் யாருக்கு ஜோடி என்ற விவரம் இன்னும் ரகசியமாக உள்ளது.

இந்நிலையில் அரண்மனைப் படப்பிடிப்புத் தளத்தில் தனது முதல் நாள் நடிப்பு அனுபவம் குறித்து ட்விட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார் ஹன்சிகா. அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, ‘இந்தப் படத்தில் நடிப்பதில் முதல்முறையாக பதற்றமாக உணர்கிறேன். இதுவரை நடிக்காத அளவுக்கு ரொம்ப முக்கியமான கேரக்டர்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

Post a Comment