அஜீத்தின் ஆரம்பம்... பேட்ச் ஒர்க்கும் முடிந்தது... அக்டோபர் 31-ல் ரிலீஸ்!

|

அஜீத் நடிக்கும் ஆரம்பம் படத்தின் பேட்ச் ஒர்க் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் முடிந்துவிட்டது. இதைத் தொடர்ந்து பூசணிக்காய் உடைத்து, படம் முழுமையடைந்ததை அறிவித்துள்ளனர் படக்குழுவினர்.

அடுத்து இந்தப் படத்தை சென்சாருக்கு அனுப்புவது மட்டுமே பாக்கி.

ஏஎம் ரத்னம் தயாரிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆரம்பம். படத்தின் பெரும்பகுதி மும்பையில் படமாக்கப்பட்டுள்ளது.

அஜீத்தின் ஆரம்பம்... பேட்ச் ஒர்க்கும் முடிந்தது... அக்டோபர் 31-ல் ரிலீஸ்!

மங்காத்தா ஸ்டைலில் தலைக்கு வெள்ளையடிக்காமல், நரைத்த தாடியுடன் நடித்துள்ளார் அஜீத்.

இந்தப் படத்தின் ஷூட்டிங் முன்பே முடிந்துவிட்டாலும், சில பேட்ச் ஒர்க் பாக்கியிருந்தது.

அதற்கான காட்சிகளை மீண்டும் மும்பை சென்று படமாக்கினார் விஷ்ணுவர்தன்.

இப்போது படப்பிடிப்பு மொத்தமாக முடிந்து, பூசணிக்காயும் உடைக்கப்பட்டுவிட்டது.

யுவன் சங்கர் ராஜா பின்னணி இசைப் பணியில் மும்முரமாக உள்ளார். அக்டோபர் முதல் வாரத்தில் படத்தின் முதல் பிரதி தயாராகிவிடும் என்றும், அக்டோபர் 21-ம் தேதி படத்தை சென்சாருக்கு அனுப்பிவிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

அக்டோபர் 31 அல்லது நவம்பர் 1-ம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Post a Comment