தமிழில் கவர்ச்சி என்றால் கொஞ்சம் முகத்தைச் சுழித்துக் கொண்டும், தெலுங்கு - இந்திக்கு தாராளமயம் என்றும் ஓரவஞ்சனை செய்து வந்த தமன்னா, இப்போது தன் போக்கை மாற்றிக் கொண்டாராம்.
தமிழிலும் இனி கவர்ச்சி நடிப்பைத் தொடரப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் தமிழில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்தவர் தமன்னா. சூர்யா, விஜய் என முன்னணி ஹீரோக்கள் அவருடன் ஜோடி போட விரும்பினர்.
ஆனால் சுறா, சிறுத்தைக்குப் பிறகு அவர் திடீரென்று காணாமல் போனார்.
தமன்னா தற்போது இரண்டு இந்தி படங்களுக்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார். தமிழில் மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ள அவர், வீரம் படத்தில் அஜீத் ஜோடியாக நடிக்கிறார்.
இந்தி, தெலுங்கில் படுகவர்ச்சியாக நடிப்பது போல, தமிழிலும் கவரச்சி வேடங்களுக்கு தயார் என அறிவித்துள்ளார் தமன்னா.
இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என ஒருபோதும் கூறவில்லை. தமிழில் எனக்கு வந்ததெல்லாம் குடும்பப் பாங்கான வேடங்கள்தான்.
கவர்ச்சியாக நடிப்பது தவறல்ல. கதைக்கு தேவையென்றால் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறேன். ரசிகர்கள் என் அழகை, கவர்ச்சியை ரசிக்க விரும்புகிறார்கள். எனவே கவர்ச்சி வேடங்களில் நடிக்க நான் மறுப்பது இல்லை," என்றார்.
Post a Comment