மும்பை: இயக்குனர், டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவா ஒரு ரவுடி, மசாலா கிங் என்று பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் மசாலா படங்கள் எடுப்பதில் வல்லவராக உள்ளார் பிரபுதேவா. அங்கு பிரபுதேவா இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் எல்லாம் ஆசைப்படுகிறார்கள். இந்நிலையில் ஷாஹித் கபூர் பிரபுதேவா இயக்கியுள்ள ஆர்...ராஜ்குமார் படத்தில் நடித்துள்ளார்.
இது குறித்து ஷாஹித் கூறுகையில்,
நான் பிரபுதேவாவின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துள்ளேன் என்று நினைக்கிறேன். அவருடன் பணியாற்றியது எனக்கு கிடைத்த கௌரவம். அவர் ஒரு ரவுடி மற்றும் மசாலா கிங். நான் பிரபுதேவா கூறியதை தான் செய்தேன். படத்தில் அதிகம் ஆக்ஷன் இருந்தது. ஆனால் படப்பிடிப்பு நல்ல அனுபவமாக இருந்தது.
நான் சிறந்த டான்சர் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் பிரபுதேவாவுடன் டான்ஸ் ஆடியபோது தான் நான் போராடிக் கொண்டிருக்கிறேன் என்பதை உணர்ந்தேன் என்றார்.
ஆர்...ராஜ்குமார் படம் வரும் டிசம்பர் மாதம் 6ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் ஷாஹித் கபூருக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா நடித்துள்ளார்.
Post a Comment