பாலிவுட் பாக்ஸ் ஆபீஸை அதிர வைத்துக் கொண்டிருக்கிறது ஹ்ரித்திக் ரோஷனின் புதிய படமான க்ரிஷ் 3-ன் வசூல்.
ஜஸ்ட் பத்தே நாட்களில் 206 கோடியைக் குவித்து புதிய சாதனையைப் படைத்துள்ளது.
இதன் மூலம் இந்திய திரைப்பட வரலாற்றில் உள்நாட்டு பாக்ஸ் ஆபீசில் இரண்டாவது வார வசூலில் 200கோடியைத் தாண்டிய மூன்றாவது படம் என்ற பெருமையை இந்தப் படம் பெற்ற்றுள்ளது.
இதற்கு முன் 3 இடியட்ஸ், சென்னை எக்ஸ்பிரஸ் போன்ற படங்கள் இந்த சாதனையை எட்டின.
கடந்த திங்கட்கிழமை மட்டும் இப்படத்தின் ஒரு நாள் வசூல் ரூ 35.91 கோடி. வார நாளில் இவ்வளவு வசூல் செய்திருப்பது புதிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
க்ரிஷ் வரிசையின் முந்தைய படங்களை ஒப்பிடும்போது அந்தப் படங்களில் குழந்தைகளை மிகவும் கவர்ந்த ஜாதூ கதாபாத்திரத்தை இதில் இயக்குநர் ராகேஷ் ரோஷன் (ஹ்ரித்திக் ரோஷனின் தந்தை) சேர்க்கவில்லை. ஆயினும், இந்தப் படம் பரவலாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பாராட்டப்பட்டு வருகிறது.
க்ரிஷ் வரிசைப் படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணம் குழந்தைகளே. அவர்கள்தான் தங்கள் பெற்றோர்களை வற்புறுத்தி தியேட்டர்களுக்கு அழைத்துச் செல்கின்றனர்.
விழாக்காலம், பரீட்சைகள் இல்லாத நேரம் என்பதால், குடும்பத்தோடு அவுட்டிங் செல்பவர்களின் முதல் தேர்வாக க்ரிஷ் 3 அமைந்துள்ளது.
இந்த வேகத்தில் வசூலைக் குவித்தால், இந்தியாவின் அதிக வசூலைக் குவித்த படம் என்ற பெருமைக்குரிய ரஜினியின் எந்திரனை நெருங்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!
Post a Comment