சென்னை: பல்வேறு படங்களில் காமெடி வேடத்தில் நடித்துள்ள நடிகர் குள்ளமணி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவர் சுய நினைவை இழந்துள்ளதாகவும், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
ஞாயிற்றுக்கிழமை இரவு குள்ளமணி வீட்டில் படுக்கப் போயுள்ளார். அதன் பிறகு 2 நாட்களாக எழுந்திருக்கவே இல்லையாம். இதையடுத்து அவரை அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். சுய நினைவை இழந்த நிலையில் உள்ள குள்ளமணிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
குள்ளமணியின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவாப் நாற்காலி படம்தான் குள்ளமணியின் முதல் படமாகும். கரகாட்டக்காரன் படத்தில் இவர் வந்து போன காமெடி வேடம் இன்றளவும் பேசப்படுகிறது. அதேபோல அபூர்வ சகோதரர்கள் உள்பட 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
61 வயதாகும் குள்ள மணியின் இயற்பெயர் சுப்பிரமணி என்பதாகும். கே.கே.நகரில்தான் இவரது வீடு உள்ளது. எம்.ஜி.ஆர். முதல் தனுஷ் வரை சகல நடிகர்களுடனும் நடித்துள்ளார் குள்ளமணி என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment