'கெட்டவனா நடிச்சது போதும்... இனி நல்லவனா நடிங்க'- ஷாலினி அட்வைஸால் மாறிய அஜீத்

|

'கெட்டவனா நடிச்சது போதும்... இனி நல்லவனா நடிங்க'-  ஷாலினி அட்வைஸால் மாறிய அஜீத்

சென்னை: தொடர்ந்து கெட்டவனாகவே நடித்தது போதும்... இனி நல்லவர் வேடங்களில் நடிங்க என்று மனைவி ஷாலினி சொன்னதைக் கேட்டுத்தான் அஜீத், வீரம் படத்தில் நல்ல ஹீரோ வேடத்தில் நடித்துள்ளாராம்.

‘பில்லா', 'அசல்', ‘பில்லா-2', ‘மங்காத்தா', ‘ஆரம்பம்' என தொடர்ந்து வில்லத்தனம் கலந்த ஹீரோவாகவே நடித்து வருகிறார் அஜீத்.

வில்லத்தனம் கலந்த ஹீரோ என்றால் பல விதங்களிலும் வசதி என நினைத்துதான் அந்த மாதிரி வேடங்களைக் கேட்டு நடித்தாராம்.

ஆனால் இப்போது அஜீத் என்றால் கெட்டவர் என்பதுபோன்ற இமேஜ் வருவதை அஜீத் மனைவி ஷாலினி சுத்தமாக விரும்பவே இல்லையாம்.

அதனால்தான் ‘சிறுத்தை' சிவா இயக்கும் ‘வீரம்' படத்தில் நல்ல ஹீரோவாக நடிக்க ஒப்புக் கொண்டாராம். ‘வீரம்' படத்தில் அஜீத் வேஷ்டி-சட்டை அணிந்து, பாசமிகு அண்ணனாகவும் அநியாயத்துக்கு எதிராக போராடுபவராகவும் வருகிறாராம்.

இந்தப் படத்துக்கான கதை விவாதத்தின்போது, தன் கதாபாத்திரம் குறித்து இயக்குநர் சிவா வர்ணித்ததை ரசித்த அஜீத் உடனே ஒப்புக் கொண்டாராம்.

இதற்கு முக்கிய காரணமே, ஷாலினியின் வேண்டுகோள்தானாம். தொடர்ந்து வில்லனாக நடிக்க வேண்டாம். இனி நல்ல ஹீரோவாக நடியுங்கள் என ஆரம்பம் படப்பிடிப்பின்போதிருந்தே சொல்லிக் கொண்டு வந்தாராம்.

 

Post a Comment