ஒரு சுயசரிதை எழுதுவதால் இவ்ளோ பிரச்சனையா?: நடிகை புலம்பல்

|

சென்னை: கவர்ச்சி நடிகை ஒருவருக்கு அவர் எழுதும் சுயசரிதையால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

ஒரு காலத்தில் தனது கவர்ச்சியால் மலையாள திரையுலகை மிரள வைத்த நடிகை தற்போது சுயசரிதை எழுதி வருகிறார். இந்நிலையில் அவர் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு கேட்டு கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்குகிறாராம். அவர் எந்த கம்பெனிக்கு சென்றாலும் அவர் கிளம்பிய பிறகு பல தொலைப்பேசி அழைப்புகள் வருகிறதாம்.

இப்பொழுது வந்துவிட்டு சென்ற நடிகைக்கு நீங்கள் வாய்ப்பளிக்கக் கூடாது. மீறி வாய்ப்பு கொடுத்தால் நீங்கள் உங்களுக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்துவோம் என்று மிரட்டுகிறார்களாம்.

இதற்கெல்லாம் காரணம் நடிகை எழுதும் சுயசரிதை தானாம். அவர் தனது வாழ்க்கையில் நடந்தவற்றை பளிச்சென்று எழுதுகிறாராம். அதில் சினிமாவில் உள்ள சில பெருந்தலைகளின் மற்றொரு முகங்களை பற்றி பல திடுக்கிடும் விஷயங்களை எழுதியுள்ளாராம். இது குறித்து அறிந்த பெருந்தலைகள் அவரை மிரட்டியும் மசியவில்லையாம். அதனால் தான் வாய்ப்புகளை கெடுத்து வருகிறார்களாம்.

இதை அந்த நடிகை தனது நலம் விரும்பிகளிடம் சொல்லி வருத்தப்படுகிறாராம்.

 

Post a Comment