சென்னை: இந்த சிவமான நடிகருக்கு வந்த வாழ்வை பாரு என்று வளர்ந்து வரும் இளம் ஹீரோக்கள் கூறி வருகிறார்களாம்.
சுள்ளான், லீடர் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த புஸு புஸு நடிகை ஹீரோ அவதாரம் எடுத்த அரசியல் குடும்பத்து தயாரிப்பாளரின் படத்தில் நாயகியாக நடித்தார். அதன் பிறகு அவர் குமாரு நடிகர், பிக்கப் டிராப் நடிகருடன் ஜோடி சேர்ந்தார். இந்நிலையில் தான் நடிகை சின்னத் திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்த சிவமான நடிகருக்கு ஜோடியானார்.
இதை பார்த்த வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களுக்கு புஸு புஸு நடிகையுடன் ஜோடி சேரும் ஆசை ஏற்பட்டுள்ளதாம். இது குறித்து அறிந்த நடிகை இப்படியே போனால் முன்னணி நடிகர்களின் படங்களில் வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும் என்று நினைத்துள்ளார். இதையடுத்து இனி முன்னணி ஹீரோக்களுடன் மட்டுமே நடிப்பேன் என்று கூறி வருகிறாராம்.
இதனால் அவருடன் ஜோடி சேர ஆசைப்பட்ட வளர்ந்து வரும் சில இளம் ஹீரோக்களுக்கு கவலையாக உள்ளதாம். சிவமான நடிகருக்கு வந்த வாழ்வு நமக்கு வருவேனா என்கிறதே என புலம்புகிறார்களாம்.
Post a Comment