சென்னை: கோச்சடையான் படத்தின் தியேட்டர் வசூல் பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது.
இந்தப் படம் வெளியான 12 நாட்களில் ரூ 85 கோடியை வசூலித்து சாதனைப் படைத்துள்ளது.
ரஜினி 3 வேடங்களில் தோன்றிய கோச்சடையான், அவரது நேரடிப் படமல்ல. அவரது உடல் அசைவுகளைப் படமாக்கி, அனிமேஷனில் பதிவு செய்து எடுக்கப்பட்ட முதல் இந்தியப் படம்.
இந்தப் படம் குறித்து ஏராளமான எதிர்மறைச் செய்திகள் மீடியாவை ஆக்கிரமித்திருந்தன. பொம்மைப் படம் என்ற கிண்டல்கள் இன்றுவரை ஓயவில்லை.
ஆனாலும் படம் வெளியானதிலிருந்து ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். பொதுவான சினிமா விரும்பிகளும் படத்தைப் பார்த்துப் பாராட்டியுள்ளனர். குறிப்பாக ரஜினியின் குரல், ரஹ்மான் இசை, கேஎஸ் ரவிக்குமாரின் திரைக்கதை இந்தப் படத்தை ரஜினியின் நேரடிப் படத்துக்கு இணையாக மாற்றிவிட்டது.
வசூலைப் பொருத்தவரை, இந்த மூன்றாவது வாரத்திலும் தமிழகத்தில் கலக்கிக் கொண்டிருக்கிறது கோச்சடையான்.
தெலுங்கிலும் பரவாயில்லை எனும் அளவுக்கு இந்த மூன்றாவது வார வசூல் அமைந்துள்ளது. இந்திப் பதிப்பு மட்டும் சரியாகப் போகவில்லை என தயாரிப்பாளரே ஒப்புக் கொண்டது நினைவிருக்கலாம்.
கடந்த மே 23-ம் தேதி வெளியான இந்தப் படம், 12 நாட்களில் திரையரங்குகள் மூலம் மட்டுமே ரூ 85 கோடியைக் குவித்துள்ளது. மற்ற மொழி வருவாய், தொலைக்காட்சி உரிமைகள் மூலம் வந்த வருவாய் அனைத்தும் சேர்த்தால் கிட்டத்தட்ட ரூ 145 கோடியை இந்தப் படம் ஈட்டியுள்ளது. படத்தின் மொத்த பட்ஜெட் ரூ 125 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
+ comments + 1 comments
It's not confirmed by Trade Pundits. Also compared to rajini previous movie,"Endhiran", it was released in more theatres and yet it grossed lesser than Endhiran.
Post a Comment