ரஜினியின் லிங்கா படம் தீபாவளியைக் குறிவைத்து எடுக்கப்பட்டு வருவதால், விஜய்யின் கத்தி படம் தீபாவளிக்கு வெளியாகுமா.. தள்ளிப் போகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் கத்தி. இதில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.
விஜய் இந்தப் படத்தில் மாறுபட்ட நாயகன் மற்றும் வில்லன் வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அனிருத் முதன்முறையாக விஜய் படத்துக்கு இசையமைக்கிறார்.
கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
காரணம், அக்ஷய்குமார்-சோனாக்ஷி சின்ஹாவை வைத்து முருகதாஸ் இயக்கியுள்ள ‘துப்பாக்கி' படத்தின் இந்தி ரீமேக்கான ‘ஹவுஸ்ஃபுல்' படம் வரும் ஜூன்-6ஆம் தேதி ரிலீஸாகிறது.
இந்தப் படத்தின் விளம்பரத்துக்காக ஏ.ஆர்.முருகதாஸ் கலந்துகொள்ள வேண்டியதால் இந்த தற்காலிக ஓய்வு.
ஐங்கரன் நிறுவனத்துடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.
ஆனால் அதே தேதியில் ரஜினியின் லிங்கா படமும் வெளியாவதால், விஜய் படம் தீபாவளிக்கு வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ரஜினியின் சந்திரமுகியும், விஜய் நடித்த சச்சினும் ஒரே தேதியில் வெளியானது நினைவிருக்கலாம்.
Post a Comment