அக்கப்போரில் இருந்து அமைதியாக மாறிய இளம் ஹீரோ

|

சென்னை: அக்கப்போர் செய்வதற்கு பெயர் போன விரல் நடிகர் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரித்து அமைதியாகிவிட்டாராம்.

விரல் நடிகரிடம் சேட்டை செய்தால் அவர் சும்மா விட மாட்டார் என்பது கோலிவுட் அறிந்தது. அவரை காதலித்த பெண்கள் அவரை பிரிந்த பிறகு அவர்களுடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் கசிந்தன. இது விரல் நடிகரின் வேலை தான் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் விரல் நடிகர் தற்போது ஆன்மீகத்தில் அதிக நாட்டம் காட்டி வருகிறாராம். முன்பெல்லாம் அவரிடம் இயக்குனர்கள் கதை கூறினால் அதை தன் ஸ்டைலுக்கு ஏற்ப மாற்றிவிடுவார். தற்போது ஆன்மீகவாதியாகிய பிறகு அவர் இயக்குனர்களின் கதையை ஒழுங்காக கேட்பதுடன் அவர்களின் கருத்துகளையும் மதிக்கிறாராம்.

அடடே வம்பு நடிகரா இவர் இப்படி அடையாளம் தெரியாத அளவுக்கு சாந்தமாகிவிட்டாரே என்று கோலிவுட்டில் வியக்கிறார்களாம்.

 

Post a Comment