விக்ரமுக்காக இந்தி வாய்ப்பைக் கூட உதறிய சமந்தா!

|

பத்து எண்ணுறதுக்குள்ள படத்தில் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார் சமந்தா.

சமந்தா முதன்முறையாக விக்ரமுடன் இணைந்து நடிக்கவிருந்த படம் ஷங்கர் இயக்கி வரும் ஐ. ஆனால் சரும நோய்ப் பிரச்சினை காரணமாக அப்போது அவர் விலகிக் கொண்டார்.

ஆனால் விக்ரமுக்கு சமந்தாவுடன் சேர முடியாத மனக்குறை இருந்து கொண்டே இருந்ததாம்.

விக்ரமுக்காக இந்தி வாய்ப்பைக் கூட உதறிய சமந்தா!

இந்த நேரம் பார்த்து சமந்தாவின் சரும நோய்ப் பிரச்சினை தீர்ந்து, அவர் மீண்டும் பிஸியாக ஆரம்பித்தார்.

அதற்குள் விக்ரமின் ஐ படமும் முடிந்துவிட, தனது அடுத்த படத்தில் சமந்தாவை ஜோடியாக்கிக் கொண்டார் விக்ரம். இதற்காக முன்கூட்டியே சமந்தாவிடம் சொல்லி வைத்திருந்தாராம் விக்ரம். எனவே தனக்கு வந்த இந்தி வாய்ப்பைக் கூட உதறிவிட்டாராம் சமந்தா.

பத்து எண்ணுறதுக்குல்ல என்று தற்காலிகமாக தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை கோலி சோடா இயக்குனர் விஜய் மில்டன் இயக்க, ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைந்து ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் தயாரிக்கிறது. டி.இமான் இசை அமைக்கிறார். படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கிவிட்டது.

இந்தப் படத்தில் சமந்தா முதன்முறையாக இரட்டை வேடம் ஏற்றிருக்கிறாராம்.

ஒரு கதாபாத்திரம் கிராமத்து பெண்ணாகவும், மற்றொன்றில் நகரத்து பெண்ணாகவும் வருகிறாராம்.

சமந்தா தற்பொழுது விஜய்யுடன் கத்தி படத்திலும், சூர்யாவுடன் அஞ்சான் படத்திலும் நடித்து வருகிறார்.

 

Post a Comment